யுவன் இசையில் நாரா ரோஹித்தின் உருவாகும் ‘சவுண்ட் இன்ஜினியர்’… வெளியான முக்கிய அப்டேட்..!

நடிகர் நாரா ரோஹித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த தெலுங்கு திரைப்படமான ‘சவுண்ட் இன்ஜினியர்’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் வெளியிடப்பட்ட நகைச்சுவை கலந்த அறிமுக வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தை சினிமில்லி மணி குமார் எழுதி இயக்குகிறார். நயன் சரிகா மற்றும் நரேஷ் விஜய கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், கரண் சி புரொடக்ஷன்ஸ் சார்பில் பரத் சவுத்ரி தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்திருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வெளியான அறிவிப்பு வீடியோவில் நகைச்சுவை நடிகர் சுதர்ஷனின் குரல் பதிவு முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. அதேபோல், கதாநாயகனான நாரா ரோஹித்துக்கு காது கேளாத குறைபாடு இருப்பது போன்ற சுவாரஸ்யமான கதாபாத்திர அமைப்பும் காட்டப்பட்டுள்ளது. இந்த முதல் அறிமுகத்திலேயே படம் முழுக்க நகைச்சுவை, கலகலப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த என்டர்டெய்னராக உருவாகி வருவதை படக்குழு உணர்த்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading