சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்தின் கதாநாயகி இவர்தானா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப் படம் தற்போது முன்தயாரிப்பு பணிகளில் பிஸியாக இருந்து வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இந்தக் கதை முதலில் நடிகர் சிம்புவிடம் சொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் 49-வது படமாக இது உருவாக இருந்தாலும், சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகே இந்தக் கதை சிவகார்த்திகேயனிடம் சென்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், படத்தின் நாயகியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் 49-வது படம் அறிவிக்கப்பட்டபோதும் அவரே கதாநாயகியாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply