மீண்டும் புதிய படத்திற்காக ஜோடி சேரும் அட்டக்கத்தி தினேஷ் – கயல் ஆனந்தி?

‘அட்டகத்தி’ தினேஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது புதுமுக இயக்குநர் மதி இயக்கும் புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், படத்தின் கதாநாயகியாக கயல் ஆனந்தி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், தினேஷ் – ஆனந்தி கூட்டணி மீண்டும் வெள்ளித்திரையில் இணைய உள்ளது.

ஏற்கனவே ‘விசாரணை’ மற்றும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மூன்றாவது முறையாக ஜோடி சேரும் இந்த கூட்டணி ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக அட்டக்கத்தி தினேஷ் நடித்த லப்பர் பந்து திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading