‘தி இந்தியா ஸ்டோரி’ ஏன் வித்தியாசமான படம்? மனம் திறந்த நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே!

கோல்மால், ஹவுஸ்புல் உள்ளிட்ட நகைச்சுவை படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஷ்ரேயாஸ் தல்படே, தற்போது காஜல் அகர்வாலுடன் இணைந்து ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்ட திரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சேட்டன் டி.கே. இயக்கியுள்ள இப்படம் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்திய பேட்டியில், இந்தப் படத்தில் நடிக்க காரணம் குறித்து ஷ்ரேயாஸ் தல்படே பேசினார். தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளிலேயே நடிக்க விரும்புவதாக கூறிய அவர், இந்த திரைக்கதை வழக்கமான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாக தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பத்துடனும் தொடர்புடைய முக்கியமான பிரச்சினையை இப்படம் பேசுவதால், அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று உடனே முடிவு செய்ததாகவும் கூறினார்.

இந்தக் கதாபாத்திரம் குறித்து பேசும்போது, இது எந்தவித அதிசய சக்தியும் இல்லாத சாதாரண மனிதனின் பயணமாக இருப்பதாக அவர் விளக்கினார். அந்த மனிதனின் வலி, கோபம், போராட்ட மனப்பான்மை போன்ற உணர்வுகள் இயல்பாக வெளிப்பட வேண்டும் என்பதே மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும், அதற்காக மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த முயன்றதாகவும் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு குறித்து இப்படம் தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் ஷ்ரேயாஸ் கூறினார். தற்போது உணவுப் பொருட்களை வாங்கும்போது அவற்றின் விவரங்களை கவனமாகப் படிப்பதாகவும், மக்கள் உணவு குறித்து சிந்திக்க வைக்கும் படமாக இது அமைந்தாலே படக்குழுவின் நோக்கம் நிறைவேறும் என்றும் குறிப்பிட்டார். மேலும், நகைச்சுவை மற்றும் சீரியஸ் கதைகள் இரண்டையும் சமமாக விரும்புவதாக கூறிய அவர், எந்த வகை படம் என்பதை விட நல்ல கதைதான் தன்னை ஈர்க்கும் என்றார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading