சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ இரண்டாவது பாடல் அப்டேட் வெளியீடு

‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொண்டுள்ளார். நவின் நூலி படத்தொகுப்பை கவனித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, புதிய பாடல் ஜூலை 25-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.மேலும், இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோ சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் புதிய பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading