பல தடைகளை கடந்து வெளியான முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’… ரசிகர்கள் கொண்டாட்டம்!

முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படம், முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.

முன்னதாக ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’, தணிக்கை சான்றிதழ் பிரச்சனை மற்றும் மறுதணிக்கை போன்ற காரணங்களால் தாமதமானது. பல்வேறு சட்ட சிக்கல்களை கடந்து தற்போது ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், இந்தியா முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. விஜய்யின் கடைசி படத்தை கொண்டாட ரசிகர்கள் திருவிழா போல் திரையரங்குகளில் திரண்டனர்.

இதற்கிடையில், படத்தின் டைட்டில் கார்டில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி.ஜோசப் விஜய்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு பிறகு ஏற்பட்ட சில நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில், அவரது தோற்றம் மற்றும் மேனரிசங்களை அடிப்படையாக கொண்ட சில காட்சிகள் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading