திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கும் ‘தினந்தோறும்’ நாகராஜ்… ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

1998-ல் முரளி, சுவலட்சுமி நடிப்பில் வெளியான தினந்தோறும் என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இந்தப் படத்தின் வெற்றியால் “தினந்தோறும் நாகராஜ்” என்று அழைக்கப்பட்டார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் புகழ்பெற்ற திரைப்படங்களான மின்னலே மற்றும் காக்க காக்க ஆகியவற்றுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது 13 வருட இடைவெளிக்குப் பிறகு, ஆகாயம் என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீராம் கார்த்திக் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் ஆலிஷா மிராணி கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயப்பிரகாஷ், கிரி துவாரகிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டெல்டா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். படத்திற்கு ரகு நந்தன் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில், ‘ஆகாயம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். தற்போது வெளியான இந்த போஸ்டர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading