துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரவி நெலகுதிதி இயக்கும் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் போஸ்டர் மூலம் வெளியானது.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் வகையில் படத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ‘ஐ ஆம் கேம்’ படத்திற்குப் பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் இதுவாகும்.
