மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. டாம் ஹாலண்ட் மீண்டும் ஸ்பைடர்மேனாக களமிறங்கியுள்ள இந்தப் படத்தை டெஸ்டின் டேனியல் இயக்கியுள்ளார்.
இதற்கு முன் வெளியான ‘ஸ்பைடர்மேன்: ஹோம் கம்மிங்’, ‘ஸ்பைடர்மேன்: பார் ப்ரம் ஹோம்’, ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ ஆகிய மூன்று திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த புதிய பாகம் உருவாகியுள்ளது.
டாம் ஹாலண்டுடன் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன், சாடி சிங், லிசா காலோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.தற்போது வெளியாகியுள்ள இறுதி டிரெய்லரில் ஹல்க் – ஸ்பைடர்மேன் மோதல் உள்ளிட்ட அதிரடி காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதனால் ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் கலந்த மற்றொரு மார்வெல் விருந்தாக இந்தப் படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
—
