இந்திய அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘பூலான்’ திரைப்படம் விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பூலான் தேவி, சமூக அநீதிகளுக்கு எதிராக போராடியவராக அறியப்பட்டவர். பின்னர் அரசியலில் இணைந்து சமாஜ்வாதி கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராகவும் செயல்பட்டார். அவரது வாழ்க்கை பல்வேறு சர்ச்சைகளும் பரபரப்பான சம்பவங்களும் நிறைந்ததாக இருந்தது.
தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதன் பின்னர், 2001-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி அவரது இல்லம் முன்பாகவே பூலான் தேவி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 11 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், ஷேர் சிங் ரானா மட்டும் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டார்.பூலான் தேவியின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பதிவு செய்யும் இந்த திரைப்படத்தை ரிச்சி மேத்தா இயக்கியுள்ளார். நாமா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
—
