பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுடன் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.
கொரோனா காலத்தில் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான இப்படம், திரையரங்குகளில் வெளியாகாதது குறித்து அப்போது ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்தனர். குத்துச்சண்டையை மையமாகக் கொண்டிருந்தாலும், அரசியல் மற்றும் சமூக பின்னணியையும் வலுவாக பதிவு செய்த திரைப்படமாக இது பாராட்டப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ‘சார்பட்டா பரம்பரை 2’ உருவாகும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தைப் போலவே ஆர்யா நாயகனாக நடிக்க உள்ளார். தமிழக அரசியலின் மற்றொரு முக்கிய காலக்கட்டத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகும் என கூறப்படுகிறது.தற்போது ‘வேட்டுவம்’ திரைப்படப் பணிகளில் ஈடுபட்டு வரும் இயக்குநர் பா. இரஞ்சித், அந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
