நடிகை திஷா பதானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் குறித்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் படப்பிடிப்புத் தளங்களுக்கோ, பொது நிகழ்ச்சிகளுக்கோ சென்றாலும், பிரத்யேகமான கண்ணாடி பாட்டில் எப்போதும் அவரது கையில் இருக்கும். திஷா பதானி அருந்தும் தண்ணீர் சாதாரணமானது அல்ல என்றும், உலகின் விலை உயர்ந்த குடிநீர் வகைகளில் ஒன்றான பிளிங் எச்20 (Bling H2O) என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வாரத்திற்கு சுமார் ஐந்து முறை இந்தக் குடிநீரை அருந்துவதாகக் கூறப்படுகிறது. இதன் 750 மி.லி. பாட்டிலின் விலை ரூ.5,000 முதல் ரூ.28,000 வரை இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Add a Comment
