‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… கவனம் ஈர்க்கும் புதிய டீசர்…

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே நிறைவடைந்திருந்தாலும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வந்ததால் ரிலீஸ் தாமதமானது. கடந்த சில மாதங்களாக இந்த ஆண்டுக்குள் படத்தை வெளியிடும் முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனுடன் புதிய ரிலீஸ் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான டீசரில் நிவின் பாலி, சூரி மற்றும் எலியை மையமாகக் கொண்ட சில காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. படத்தின் காட்சியமைப்பும், பின்னணி இசையும் வித்தியாசமான திரை அனுபவத்தை தரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading