நடிகைகளின் போராட்டங்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்! கீர்த்தி சனோன் கருத்து

பாலிவுட்டில் தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள கீர்த்தி சனோன், நடிப்பில் மட்டுமின்றி கவர்ச்சியான திரைத் தோற்றத்தாலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். 2021-ல் வெளியான ‘மிமி’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற இவர், சமீபத்தில் வெளியான ‘காக்டெயில்-2’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததற்காக விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இருப்பினும், இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியிலும் தனது திரைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசியுள்ள கீர்த்தி சனோன், நடிகைகளின் வாழ்க்கையை வெளியில் இருந்து பார்ப்பது போல எளிதாகக் கருதிவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். சினிமா என்பது அனைவருக்கும் கிடைத்துவிடாத அரிய வாய்ப்பு என்றும், அதில் பயணிக்கும் பெண்கள் பல்வேறு தடைகளைக் கடக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆண் நடிகர்கள் அதிக வயதிலும் கதாநாயகர்களாகத் தொடர்ந்து நடிக்க முடிகிறது. ஆனால், திருமணம் அல்லது குழந்தைப் பேறு போன்ற வாழ்க்கையின் அடுத்த கட்டங்களைச் சந்திக்கும் நடிகைகள், திரையுலகில் தங்களுக்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்வதில் கூடுதல் சவால்களை எதிர்கொள்கின்றனர் என வேதனை தெரிவித்துள்ளார். நடிகைகளைப் பற்றிய பொதுவான தவறான கண்ணோட்டம் சினிமாவின் தொடக்கக் காலத்திலிருந்தே நீடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மற்றவர்கள் என்ன பேசினாலும், அது தேவையற்றது என்று கடந்து சென்று எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம். இது பயத்தினால் அல்ல” என்று கீர்த்தி சனோன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading