‘ஹாய்’ படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட்… ‘ரசகுல்லா’ ப்ரோமோ வெளியீடு!

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

முன்னதாக வெளியான ‘கண்ணக்குழியா’ மெலடி பாடல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

‘ரசகுல்லா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த உற்சாகமான பாடலை இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். மேலும், ப்ரோமோவின் நிறைவில் முழு பாடல் நாளை (22 ஜூலை 2026) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜோடியாக நயன்தாரா – கவின் இணைந்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading