‘முண்டாசுப்பட்டி’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற நகைச்சுவை நடிகர் முனிஷ்காந்த், ‘தாய் கிழவி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ‘ஜுமாக்கா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். காமெடி – பேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அசோக் ராம் எழுதி இயக்கியுள்ளார்.
முனிஷ்காந்துடன் பாலாஜி சக்திவேல், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, கல்கி ராஜா, ஜென்சன் திவாகர், ஜெயக்குமார், அனன்யா எஸ். ராவ், வினோத் முன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனந்த் காஷிநாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த நிலையில், ‘ஜுமாக்கா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், திரைப்படம் வெற்றி பெறவும் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.மேலும், படத்தின் சில காட்சிகளை முன்கூட்டியே பார்த்த விஜய் ஆண்டனி, இயக்குநர் அசோக் ராம் மற்றும் தயாரிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரின் பணியை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள ‘ஜுமாக்கா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
—
