AI தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் தமிழ்ப் படம்… ‘அவிரா’ புதிய மைல்கல்

இந்திய திரையுலகில் முதன்முறையாக முழுக்க முழுக்க ‘Photo Realistic AI’ தொழில்நுட்பத்தில் உருவாகும் முழுநீள தமிழ்த் திரைப்படமாக ‘அவிரா’ உருவாகி வருகிறது. மனிதர்களையும் காட்சிகளையும் நிஜத்திற்கு நிகராக உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்தப் படத்தின் முக்கிய அம்சமாகும்.

இப்படத்தை பிரபாகரன் இயக்குவதுடன், கதை, திரைக்கதை, வசனத்தையும் அவரே எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் புதிய தொழில்நுட்ப முயற்சியாக இந்த படம் உருவாகி வருகிறது.

புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட பேண்டஸி திரைப்படமான ‘அவிரா’, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் வித்தியாசமான கதைக்களம் காரணமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading