ராஜமவுலியின் ‘வாரணாசி’ படத்திற்கு ஹாலிவுட் படங்களால் புதிய சவால்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ திரைப்படம் 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ‘வாரணாசி’ வெளியாகும் காலகட்டத்தில் ‘Godzilla x Kong: Supernova’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களும் வெளியாக இருப்பதால், ஐமேக்ஸ் மற்றும் பிரீமியம் லார்ஜ் பார்மட் திரையரங்குகளைப் பெறுவதில் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் பிரமாண்டமாக படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள ராஜமவுலிக்கு, அதிகளவிலான ஐமேக்ஸ் திரைகளைப் பெறுவது முக்கிய சவாலாக பார்க்கப்படுகிறது. ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் முன்கூட்டியே திரைகளை முன்பதிவு செய்வது வழக்கமாக இருப்பதால், ‘வாரணாசி’ படத்தின் வெளியீட்டில் இதுவே முக்கிய சிக்கலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading