நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 26-வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரது தயாரிப்பில் ‘அருவி’ பட இயக்குநர் அருண் பிரபு புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனே கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி அவர் இப்படத்தை தயாரிக்க மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் நடிகர்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
