மாரி செல்வராஜ் தயாரிப்பில் அமீர் நடிக்கும் ‘மாகாளி’ படப்பிடிப்பு தொடக்கம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தை இயக்கும் பணிகளில் மாரி செல்வராஜ் ஈடுபட்டுள்ளார். கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இதனிடையே, தனது நிவி ஸ்டியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புதிய திரைப்படம் ஒன்றையும் அவர் தயாரிக்கிறார்.

‘மாகாளி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அரவிந்த் இயக்குகிறார். இயக்குநரும் நடிகருமான அமீர் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading