அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ‘தாய் கிழவி’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி, ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்த வெற்றியை முன்னிட்டு, படத்தின் 100-வது நாள் விழா நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு தயாரிப்பாளர்களான சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் சுந்தரம் இணைந்து கார் ஒன்றை பரிசாக வழங்கினர்.
மேலும், படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுக் கேடயங்கள் வழங்கப்பட்டன. தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
—
