நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘ஓம்’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த திரைப்படம், தனுஷின் 55-வது படமாக உருவாகி வருகிறது.
‘ஓம்’ திரைப்படத்தை வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் மம்மூட்டி வில்லனாக நடிக்க, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா கதாநாயகிகளாக இணைந்துள்ளனர். படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் நஸ்ருதீன் ஷா இப்படத்தில் இணைந்திருப்பதை சிறப்பு போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் இதற்கு முன் ‘ஹே ராம்’ திரைப்படத்தில் மகாத்மா காந்தியாக நடித்திருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனுஷின் ‘ஓம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வருகிறார்.
