8 மாதங்களில் அசத்தலான மாற்றம்… ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய கிரேஸ் ஆண்டனி!

மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி, கடந்த எட்டு மாதங்களாக மேற்கொண்ட கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் கணிசமான அளவில் உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

2016-ஆம் ஆண்டு ‘ஹேப்பி வெட்டிங்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கிரேஸ் ஆண்டனி, ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘தமாஷா’, ‘ஹலால் லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இயக்குநர் ராம் இயக்கிய ‘பறந்து போ’ திரைப்படத்தில் ‘குளோரி’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களுடன் வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு தனது காதலரான அபிடாம் சிரியாகை திருமணம் செய்து கொண்ட கிரேஸ் ஆண்டனி, திருமணத்திற்குப் பிறகும் திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார். அதே நேரத்தில் தனது உடல்நலனிலும் அதிக கவனம் செலுத்தி, கடந்த எட்டு மாதங்களாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, கட்டுப்பாடான உணவுமுறையை பின்பற்றி உடல் எடையை குறைத்துள்ளார்.உடல் எடை குறைப்பதற்கு முன்பும், பின்னரும் எடுத்த ‘Before – After’ புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி, அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading