சுப்பிரமணியபுரம் பட நடிகை ஸ்வாதி ரெட்டிக்கு திருமணம்!

‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்வாதி ரெட்டி, நேற்று இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோதியை திருமணம் செய்து கொண்டார். இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 2005-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘Danger’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தமிழில் ‘சுப்ரமணியபுரம்’, ‘கனிமொழி’, ‘போராளி’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வடகறி’, ‘யட்சன்’, ‘யாக்கை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு விகாஸ் வாசுவை திருமணம் செய்துகொண்ட ஸ்வாதி ரெட்டி, 2022-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து தற்போது இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோதியுடன் திருமணம் செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் நாகோதி, ‘பானுமதி & ராமகிருஷ்ணா’ மற்றும் ‘Month of Madhu’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர். ‘Month of Madhu’ திரைப்படத்தில் ஸ்வாதி ரெட்டி நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட எளிய நிகழ்வாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண புகைப்படங்களை ஸ்வாதி ரெட்டி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading