நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ அம் கேம்’ திரைப்படம் ஆக்ஷன் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் தயாராகியுள்ளது. ‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாகியுள்ளது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் சகோதரர்கள் வடிவமைத்துள்ளனர். துல்கர் சல்மான் மற்றும் ஜாம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும் ஒருவரைச் சுற்றி எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டதாக உருவாகியுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடலான ‘அருகே அருகே அவளும் வந்தாலே’ ஏற்கனவே வெளியாகியிருந்தது. தற்போது படத்தின் 2வது பாடலான ‘லூசர்’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
—
