நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் அடுத்த கட்ட பயணத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
அக்டோபர் 15-ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்துள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளங்களில் அறிவித்தது.
அதன்படி, ஜெயிலர் 2 அறிவிப்பு டீசரில் இடம்பெற்றிருந்த ‘One Name’ ஆடியோ ட்ராக்கை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வெளியீடு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
