‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன் மற்றும் ‘NEEK’ படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ள பாரி இளவழகன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சேத்தன், கோபி அரவிந்த், நிகிலா சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்ட நிலையில், டைட்டில் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார்.
ஏற்கனவே ‘தொடுவானத்ததில்’ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது ‘மச்சான் மாட்டிக்கிட்டான்’ என்ற புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. குடும்பம், காதல் மற்றும் நட்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
—
