‘பிளாஸ்ட்’ வெற்றிக்குப் பிறகு விக்ரமுடன் இணைகிறாரா இயக்குனர் சுபாஷ் கே ராஜ்?

பிளாஸ்ட் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் தனது அடுத்த படத்திற்காக நடிகர் சீயான் விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுபாஷ் கே ராஜ், அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்த பிளாஸ்ட் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சுமார் ₹75 கோடி வசூல் செய்து வணிகரீதியாக வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம், ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது சீயான் விக்ரம் என கூறப்படுகிறது.

தற்போது பிளாஸ்ட் வெற்றியைத் தொடர்ந்து, சுபாஷ் கே ராஜ் மற்றும் விக்ரம் இடையே புதிய திரைப்படம் தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விக்ரம், இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் சீயான் 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading