விஜய் சேதுபதி வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டைட்டில் டீசர்…!

சுசீந்திரனின் உதவி இயக்குநரான நானி, டெலிவரி பாய் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்த நிலையில், தற்போது டெலிவரி பாய் திரைப்படத்தின் டைட்டில் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வரும் இந்த டீசருடன், படம் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading