மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி திரைப்படத்தில் ‘புரூஸ்லி’ பிஜி கதாபாத்திரத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை பெமினா ஜார்ஜ், தற்போது ஹெக்கூ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், தொடர்ந்து தீப்பொறி பென்னி, ஷேசம் மைக்கேல் பாத்திமா, கரக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹெக்கூ திரைப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். இதில் ஏகன், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ள நிலையில், பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ளார்.
கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பின்னணிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சினிமாவில் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை நான்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள பெமினா ஜார்ஜ், ஹெக்கூ திரைப்படம் மூலம் தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
—
