‘யு/ஏ’ சான்றிதழ் பெற்ற பவிஷ் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படம்!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பவிஷ் நாராயண் கதாநாயகனாக நடித்துள்ள லவ் ஓ லவ் திரைப்படம், வருகிற ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நாக துர்கா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை, இயக்குநர் லஷ்மணின் உதவி இயக்குநரான மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.

செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக், அனிருத் வெளியிட்ட டிரெய்லர் மற்றும் சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், லவ் ஓ லவ் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், தணிக்கை வாரியம் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், இறுதிக்கட்ட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading