அதர்வாவுடன் கைகோர்க்கும் ஹரி? வெளியான முக்கிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான ஹரி, அடுத்ததாக நடிகர் அதர்வாவை வைத்து புதிய திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஹரியின் முந்தைய வெற்றிப்படங்களைப் போலவே, இந்தப் படமும் முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பிரசாந்தை வைத்து படம் இயக்கும் திட்டமும், பின்னர் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் இணையும் முயற்சியும் முன்னேறாத நிலையில், தற்போது அதர்வாவுடன் ஹரி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

2024-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்திற்குப் பிறகு ஹரி இயக்கும் புதிய படம் இதுவாக இருக்கும் என்பதால், இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading