நடிகரும் இயக்குநருமான சசிகுமார் கடந்த 2018-ம் ஆண்டு ஏரிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிறுவர் பூங்காவிற்கு சென்றிருந்தார். அவர், பல்வேறு இடங்களை பார்வையிட்டதுடன், பூங்காவில் மரக்கன்றை நட்டு வைத்தார். இந்நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்கு சென்ற சசிகுமார், தான் நட்டு வைத்த மரம் செழிப்பாக வளர்ந்துள்ளதை கண்டு மகிழ்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியுடன் இதை பதிவிட்டுள்ளார்.
Add a Comment
