Advertisement

‘ஸ்பிரிட்’ படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கும் பிரபாஸ்!

நடிகர் பிரபாஸ் தற்போது ‘கல்கி பார்ட் 2’, ‘பவுசி’, ‘ஸ்பிரிட்’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அனிமல்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி வரும் ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிப்தி திம்ரி நடித்துவருகிறார்.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பிரபாஸ் மற்றும் த்ரிப்தி திம்ரி இடம்பெறும் கல்லூரி பருவ காதல் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. 46 வயதான பிரபாஸ் கல்லூரி மாணவராக நடித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபாஸ் நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதால், அவரது கதாபாத்திரத்தின் பிளாஷ்பேக் காட்சிகளாக இந்த கல்லூரி பருவ காட்சிகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply