‘பராசக்தி’ பட சம்பளப் பாக்கி சுதா கொங்கரா நீதிமன்றத்தில் வழக்கு!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமாக உருவான ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 1960-களில் தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதுடன், ஓடிடி தளத்திலும் ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்திற்காக வழங்கப்பட வேண்டிய ரூ.8.39 கோடி ஊதியம் இன்னும் நிலுவையில் இருப்பதாகக் கூறி இயக்குநர் சுதா கொங்கரா, மதராஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 8-ஆம் தேதி வரை ‘பராசக்தி’ திரைப்படத்தின் செயற்கைக்கோள் (Satellite) உரிமை தொடர்பான வெளியீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று வாய்மொழியாகக் குறிப்பிட்டுள்ளது.மேலும், ஜூலை 10-ஆம் தேதி வெளியாக உள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading