Advertisement

‘கார்கி’ திரைப்படத்திற்கு ‘நோ’ சொல்ல என்ன காரணம்? மனம் திறந்த‌ நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி மலையாள திரைப்படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சாய்பல்லவி நடித்த ‘கார்கி’ திரைப்படத்தை ஏன் நிராகரித்தீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்தார். அதற்கு, “முதலில் ‘கார்கி’ திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அணுகினர். ஆனால், அந்தக் கதையை கேட்டபோது, அந்த நேரத்தில் என்னைவிட பெரிய நடிகை ஒருவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் தான் படத்திற்கு சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். அதுவே இயக்குநருக்கும் படத்திற்கும் நல்லதாக இருக்கும் என்பதால் அந்த வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன்.

ஆனால், தற்போது நான் இருக்கும் நிலைமையில் அந்த வாய்ப்பு வந்திருந்தால், நிச்சயமாக அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், பின்னர் வெளியான ‘கார்கி’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply