பட்ஜெட் தொடர்ந்து உயர நட்சத்திரங்களின் சம்பள உயர்வு முக்கியமான காரணம் – தயாரிப்பாளர் தில் ராஜூ OPEN TALK!

தமிழில் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை தயாரித்த பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு, தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், விநியோகஸ்தராகவும், பல திரையரங்குகளை தனது நிர்வாகத்தின் கீழ் நடத்தி வருபவராகவும் உள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், திரைப்படங்களின் வசூல் தொடர்பாக வெளியிடப்படும் பெரும்பாலான தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது உண்மைக்கு புறம்பானதாகவோ இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்தின் உண்மையான வசூல் விவரங்கள் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமே முழுமையாக தெரியும். ஆனால், ஒரு திரைப்படத்தின் வசூல் மற்றொரு படத்திற்கான அளவுகோலாக பயன்படுத்தப்படும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக, நட்சத்திரங்களின் மதிப்பையும், அவர்களது ரசிகர்களின் மனநிறைவையும் பாதுகாக்கும் நோக்கில், தயாரிப்பாளர்கள் பல சமயங்களில் மிகைப்படுத்தப்பட்ட வசூல் புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்தவும், போட்டியிடும் ரசிகர் குழுக்களிடையே தங்களது நட்சத்திரமே முதலிடம் வகிக்கிறார் என்ற பிம்பத்தை நிலைநிறுத்தவும் இதுபோன்ற வசூல் அறிவிப்புகள் பெரும்பாலும் வெளியிடப்படுகின்றன. மேலும், திரைப்படங்களின் பட்ஜெட் தொடர்ந்து உயர்வதற்கு நட்சத்திரங்களின் அதிகரித்துவரும் சம்பளமும் முக்கிய காரணமாக உள்ளது. பல ‘பான் இந்தியா’ திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகரின் சம்பளம் மட்டும் மொத்த பட்ஜெட்டில் 40 சதவீதம் வரை செல்கிறது. இதன் விளைவாக தயாரிப்பு செலவுகள் அதிகரிப்பதோடு, டிக்கெட் கட்டணங்களும் உயர்கின்றன. அதேநேரத்தில், திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது” என்று தில் ராஜு தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading