கோலாகலமாக நடைபெற்ற சுந்தர் சி – குஷ்புவின் மகளான அவந்திகா திருமணம்… வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவிலும் தென்னிந்திய திரையுலகிலும் 1990-களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அவந்திகா ஏற்கனவே நடிகையாக அறிமுகமாகி, மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தமிழில் ‘அட்டாக்கர்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இளைய மகள் அனந்திதா திரைப்பட தயாரிப்பு துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவந்திகாவுக்கும் ஷ்ரவன் சீனிவாசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர். இந்த நிலையில், அவந்திகா – ஷ்ரவன் திருமணம் கோவாவில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட்டில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்த நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜூனா, திரிஷா, லிஸி, சரிகா, அனில் கபூர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல திரைப்பட பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்றனர். அவர்கள் கலந்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களை பகிர்ந்து, “எங்களின் அன்பு மகள் அவந்திகாவுக்கும் ஷ்ரவன் சீனிவாசனுக்கும் ஜூன் 25-ஆம் தேதி குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள இந்த தம்பதியருக்கு உங்கள் அன்பான ஆசிகளையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading