செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஷ்ணு விஷாலுடன் இணைந்து, இதில் குஸ்தி வீராங்கனையாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
இந்த நிலையில், திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமியிடம், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலி போன்ற சிறிய கதாபாத்திரங்களை ஏன் தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கதாபாத்திரம் பெரியதா, சிறியதா என்பது முக்கியமல்ல. அந்த கதாபாத்திரமும் கதையும் எனக்கு திருப்தி அளிக்கிறதா என்பதுதான் முக்கியம்.
எல்லோராலும் ராஷ்மிகா மந்தனாவைப் போல இருக்க முடியாது. முழுநீள கமர்ஷியல் கதாநாயகி கதாபாத்திரங்களை அவர் மிகவும் இயல்பாக செய்து வருகிறார். அந்த மாதிரி நடனமாடுவதோ, முழுமையான கமர்ஷியல் கதாநாயகியாக இருப்பதோ என்னால் முடியாது. அது மிகவும் கடினமான விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.
