Advertisement

என்மீது காட்டும் அன்பிற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்… நடிகை மாளவிகா மனோஜ்!

மீரா கதிரவன் இயக்கத்தில், ஈசா, மாளவிகா மனோஜ், அருள்குமார், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன் உள்ளிட்டோர் நடித்த ‘ஹபீபி’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. 1980-களில் தென் தமிழகத்தில் வாழ்ந்த தமிழ் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் கலாசாரத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு, படக்குழுவினர் சென்னை நகரில் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை மாளவிகா மனோஜ், “ஹபீபி தமிழில் நான் நடித்த முதல் திரைப்படம். இருப்பினும் பல்வேறு தடைகளை கடந்து, காலதாமதமாக வெளியாகி தற்போது வெற்றிப் படமாக அமைந்துள்ளது. சினிமாவில் நாம் சந்திக்கும் கஷ்டங்களும், மேற்கொள்ளும் உழைப்பும் ஒருபோதும் வீணாகாது.

தமிழ் ரசிகர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். அவர்கள் என்மீது காட்டும் அன்பிற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் நடித்து, ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன்” என்று தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply