தென்னிந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
குறிப்பாக திரைப்பட விழாக்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் அவர் வெளிப்படுத்தும் ஸ்டைலான தோற்றம் பலரது கவனத்தையும் ஈர்க்கிறது. திருமணத்திற்குப் பிறகும் கவர்ச்சியான தோற்றத்தில் அவர் தோன்றுவது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுவதுடன், சில தரப்பினரிடமிருந்து விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
இதுகுறித்து ரகுல் பிரீத் சிங் கூறுகையில், “கவர்ச்சி என்பது நடிப்பின் ஒரு பகுதிதான். எல்லை மீறாத அளவில் இருக்கும் கவர்ச்சி தவறானது அல்ல. கவர்ச்சி குறித்த தவறான பார்வை மாறினாலே பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். திருமணம் என்பது நடிகைகளின் வாழ்க்கையில் எந்தத் தடையையும் உருவாக்காது. திறமையை எந்த விஷயமும் கட்டுப்படுத்த முடியாது. நல்ல புரிதல் இருந்தால் அனைத்தையும் நேர்மறையாக மாற்ற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
