தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும், சிறந்த நடன திறமையால் கவனம் பெற்றவராகவும் திகழும் ஸ்ரீலீலா, ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது நடிகர் தனுஷுடன் இணைந்து ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனக்கு இணையாக ஆட எந்த நடிகரும், நடிகையும் இல்லை என்று ஸ்ரீலீலா தெரிவித்ததாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல்களை ஸ்ரீலீலா முற்றிலும் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அகந்தை என்பது என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. நான் அப்படிப்பட்ட சூழலில் வளர்க்கப்படவும் இல்லை. அனைவரையும் மதிக்கும் குணம் கொண்டவள் நான். எனவே, இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை பரப்புபவர்கள் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். என்னைப் பற்றி உண்மையாக அறிந்தவர்களுக்கு நான் யார் என்பது நன்றாகவே தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
