‘தர்மன்’ 5 ரூபாய் டாக்டரின் கதை அல்ல… முக்கியமான அப்டேட்-ஐ கொடுத்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தர்மன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த திரைப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை சிம்ரன், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், ‘படையப்பா’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படங்களின் அம்சங்கள் கலந்த ஒரு அனுபவத்தை ‘தர்மன்’ திரைப்படம் வழங்கும் என்று கூறினார். இந்த திரைப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரில்லர் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading