‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துவரும் ‘காஞ்சனா 4’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தெலுங்கில் நடிக்கும் 41வது திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, ஹிந்தி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து வரும் அவர், ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதைப் போல, மேலும் சில திரைப்படங்களிலும் சிறப்பு நடனக் கலைஞராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில், தன்னைப் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் பூஜா ஹெக்டே, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நீளமாக இருந்த தனது தலைமுடியை குட்டையாக வெட்டி புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். வெட்டிய தலைமுடியை கைகளால் கோதியபடி அந்த வீடியோவில் அவர் தோன்றியுள்ளார். பூஜா ஹெக்டேவின் இந்த புதிய ஹேர் ஸ்டைலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதுடன், சமூக வலைதளங்களில் லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.
