‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் நடித்த பவிஷ் நாராயண் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் லஷ்மணிடம் ‘போகன்’ மற்றும் ‘பூமி’ திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மேலும், இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஸினிமா மீடியா நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இன்றைய தலைமுறை இளைஞர்களின் உணர்வுகளையும் காதலையும் நவீன பார்வையில், மனதை நெருங்கும் வகையில் சொல்லும் காதல் கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், படத்தின் ‘பிரோக் பாய்’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதீப் பிஜே எழுதி பாடியுள்ள இந்தப் பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ‘லவ் ஓ லவ்’ திரைப்படம் வருகிற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
—
