நயன்தாரா – விக்னேஷ் சிவனின் குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்த நடிகர் மம்முட்டி!

தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரத் தம்பதிகளான நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் இரட்டையர் மகன்கள் உலக் மற்றும் உயிர் ஆகியோர் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டியுடன் உலக் மற்றும் உயிர் இணைந்து இருக்கும் அழகிய புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து, மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்திலும் இந்த சந்திப்பு தொடர்பான மேலும் சில புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அந்தப் பதிவில், “சிறு சிறு சிரிப்பொலிகள், அகன்ற புன்னகைகள் மற்றும் அளவற்ற மகிழ்ச்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பகிரப்பட்ட புகைப்படங்களில், ஒரு சோபாவில் மம்முட்டி நடுவில் அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் உலக் மற்றும் உயிர் ஆகியோர் அமர்ந்திருப்பதை காண முடிகிறது. குழந்தைகள் ஏதோ ஆர்வமாக பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில் மம்முட்டி புன்னகைப்பதும், மறுபுறம் மம்முட்டி பேசியதைக் கேட்டு குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரிப்பதும் அந்தப் புகைப்படங்களில் இயல்பாக பதிவாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading