கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனல் பறக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட பிசினஸ்!

‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் மார்க்கெட் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவரது அடுத்த படமான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த விலையை விட அதிக மதிப்பில் விற்பனை பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்று வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளதால், பல ஓடிடி தளங்களும் இந்தப் படத்தின் உரிமையை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றன.

தந்தை – மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜு இடையேயான காதல் கதைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர், சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை வழங்குகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ப்ளை’ வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தற்போது திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading