தமிழில் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’, ‘ஜகமே தந்திரம்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது சில புதுமுக நடிகர்களை வைத்து குறுகிய கால அட்டவணையில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் அடுத்ததாக முழுமையான ஆக்ஷன் கதைக்களத்தில் ஒரு புதிய திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அதர்வா நடிக்க உள்ளார். மேலும், முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் உப்பேந்திரா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், இந்தப் படத்தில் அதர்வாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
—
