Advertisement

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு – திரையுலகினர்‌ இரங்கல்!


தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர் சிங்கீதம் சீனிவாச ராவ். இயக்குநர் மட்டுமின்றி தயாரிப்பாளர், இசையமைப்பாளர், கதாசிரியர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படங்களை உருவாக்கியுள்ளார்.

தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘ராஜபார்வை’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியுள்ளார். இதுதவிர ‘மகளிர் மட்டும்’, ‘சின்ன வாத்தியார்’, ‘காதலா காதலா’, ‘லிட்டில் ஜான்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட படங்களும் அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ளன.


90 வயதைக் கடந்த பிறகும் சினிமா மீதான ஆர்வத்தை தொடர்ந்து கொண்டிருந்த சிங்கீதம் சீனிவாச ராவ், சமீபத்தில் ‘சிங் கீதம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். பான் இந்தியா படைப்பாக உருவான இப்படம், அவரது திரைப்பயணத்தில் சமீபத்திய படைப்பாக அமைந்தது.
இந்நிலையில், சிங்கீதம் சீனிவாச ராவ் மறைந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply