தெலுங்கு திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்’. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரைலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார்.
சமந்தாவுடன் இணைந்து குல்ஷன் தேவையா, திகந்த், கவுதமி, ஆனந்த், ஸ்ரீமுகி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமந்தாவின் கணவரான ராஜ் நிடிமோரு இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
k
